நாட்டில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம்! விடுதலைப் புலிகள் அமைப்பினை காரணம் காட்ட நடவடிக்கை - நாடாளுமன்றில் தகவல்
எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்றைய சபை அமர்வில் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென் பகுதிகளில், வெளிநாட்டு உளவுச்சேவைகளின் பங்களிப்புடன் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக கூறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு – கிழக்கில் பணியாற்றும் வெளிநாடுகளின் அலுவலர்கள் குறித்த தினங்களில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் வீடும் தாக்கப்படலாம்
இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் பிரதேச அரசியல்வாதிகளின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
குறித்த தகவலில் உண்மையிருக்கிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபையில் கேள்வி எழுப்பினார்.
எனினும் இதனை பாதுகாப்பு தரப்பு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று பிரதி சபாநாயகர் பதில் வழங்கினார்.


Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
