நாமலின் பதவி தொடர்பில் சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி - செய்திகளின் தொகுப்பு
மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினால் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம் என குறித்த குழுவினர் ஜனாதிபதியைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினால் 100க்கும் மேற்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாமலுடன் எதிர்க்கட்சியில் இணைந்து நாமலை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாகக் குறித்த குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,