ரணிலின் அதிரடி முடிவுகளின் பின்னணி தொடர்பில் வெளியான தகவல்-செய்திகளின் தொகுப்பு
கோட்டா கோ கம போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தை அதிரடியான முறையில் இராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் எழுந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும் இலங்கைக்கு கிடைக்கும் காலம் பின்தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் சாணக்கியம் கொண்ட ரணில் விக்ரமசிங்கவினால் எவ்வாறு இவ்வாறான அடக்கு முறைகளை பிரயோகிக்க முடிந்தது. இதன் பின்விளைவுகள் குறித்து அவர் ஏற்கனவே தெரிந்திராமல் இருந்தாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை முற்றாக அகற்றும் நடவடிக்கையில் சமகால ஜனாதிபதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,