பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு
பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு பணி புரிவதற்கு தகுதி பெறுவதற்கான தேர்வை இரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டவர்களான பல் மருத்துவர்கள் பிரித்தானியாவில் மருத்துவர்களாக பணியாற்றவேண்டுமானால், அதற்காக அவர்கள் ஒரு தேர்வு பரீட்சையில் பங்குபற்றி சித்தியடைய வேண்டும்.
ரத்து செய்யப்படும் தேர்வு
தற்போது, பிரித்தானியாவில் பல் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறமையினால் பிரித்தானிய அரசு மக்களின் நலன் கருதி குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவில் பல் மருத்துவர்களாக பிரித்தானிய மருத்துவமனைகளில் பணி புரிவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் இவ்வாறு பிரித்தானியாவில் பணி புரிவதற்காக வரும் தகுதி வாய்ந்த வெளிநாட்டு பல் மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
