சனல் 4 மரணக் கயிறாக மாறும் : உதய கம்மன்பில - செய்திகளின் தொகுப்பு
சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் இலாபத்துக்காக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புலனாய்வுத்துறையை 2001 - 2004 காலத்தைப் போன்றும், 2015 காலத்தைப் போன்றும் வீழ்ச்சியடையச் செய்து இராணுவத்தினரைப் பலவீனமாவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்துக்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.
அரசைத் தாக்குவதாகக் கூறி எமது இராணுவத்தினரைத் தாக்குவதற்கு இடமளிக்க முடியாது.
எமது தாய்நாட்டுக்கு தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. இதனால் சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும் என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருபவர்கள் சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் விசாரணை அமைப்பு இங்கே வந்தது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,