மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கம் வழங்கும் நிவாரண கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன, ஏதாவது பிரதேசங்களில் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (20.06.2023) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சந்திம வீரக்கொடி குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் மூத்த பிரஜைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை.
அதேவேளை, வலது குறைந்தவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் இவ்வாறு வழங்கப்படுவதில்லை. அது தொடர்பில் நிதியமைச்சு உடனடி கவனத்தை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள் நிலையில் இதற்கு பதில் நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,
நிதி அமைச்சானது மக்களுக்கு வழங்கும் நிவாரண கொடுப்பனவுகளில் எத்தகைய குறைபாடுகளையும் வைக்கவில்லை. அவ்வாறான கொடுப்பனவுகள் உரிய காலத்தில் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




