மட்டக்களப்பில் புதிதாக புரணமைக்கப்பட்ட வீதிகள்: மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு (Photos)

Batticaloa S. Viyalendiran Senthil Thondaman
By Bavan Jul 12, 2023 03:45 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட வீதிகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இந்த வீதிகள் இன்று (12.07.2023) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வழிகாட்டலின் கீழ் பொது தீர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் TCAMP-PRDP நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 72 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு கொக்குவில் சத்துருகொண்டான் தன்னாமுனை வீதிகள் புனரமைக்கப்பட்டன.

மட்டக்களப்பில் புதிதாக புரணமைக்கப்பட்ட வீதிகள்: மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு (Photos) | Newly Reconstructed Streets In Batticaloa

இதனை மக்கள் பாவனைக்கா திறந்துவைக்கும் நிகழ்வு கொக்குலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி செயலாளர் யு.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டு தொகையாக 3.4 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாதிக்கப்பட்டவர்களுக்கு  வழங்கிவைத்தார்.

மட்டக்களப்பில் புதிதாக புரணமைக்கப்பட்ட வீதிகள்: மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு (Photos) | Newly Reconstructed Streets In Batticaloa

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8 மற்றும் 9 திகதிகளில் மொன்டோஸ் என்றழைக்கப்பட்ட குளிருடன் கூடிய சூறாவழி ஏற்பட்டதில் திறந்த வெளியில்  வளர்க்கப்பட்ட கால்நடைகள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இறந்திருந்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நஸ்ட ஈடுவழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கால்நடை திணைக்கள காரியாலயத்தில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.பாசி தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், விசேட அதிதியாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் ஆசிரியர் பற்றாக்குறை

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச அமைச்சினால் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் கிழக்கு மாகாண ஆளுனரால் திறந்துவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது உணவு பழக்க வழங்கம்,மருத்துவ பழக்கவழக்கமே அதற்கு காரணமாகும். அதன்காரணமாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத மருத்துவத்துறையினை கிராம மட்டத்தில் சகல உதவிகளையும் வழங்கி விரிபுபடுத்துமாறு கூறியுள்ளேன்.

வைத்தியர் பற்றாக்குறைக்கு காரணம் தனியார் மருத்து பல்கலைக்கழகத்திற்கு இங்கு அனுமதியில்லை. அரசாங்கம் மட்டுமே அதனை செய்கின்றது.

வருடாந்த வைத்தியர் தேவையினை கருத்தில்கொண்டு மாணவர்கள் உள்ளீர்க்கப்படும்போதே வைத்திய பற்றாக்குறையினை தீர்க்கமுடியும்.

40வருடத்திற்கு முன்பாக மொத்தமாகவுள்ள வைத்தியசாலைகளுக்கு பல்கலைக்கழகதிலிருந்து வெளியேறும் மாணவர்கள் போதுமானதாகயிருந்தது.

இன்றும் அதே எண்ணிக்கையினையே தொடர்ந்துவருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் ஐந்தாயிரம்பேர் மருத்துவர்களாக வெளியேறிவரவேண்டும். அப்போதுதான் வைத்தியர் பற்றாக்குறையினை நீக்கமுடியும்.

சுகாதார அமைச்சருடன் இது தொடர்பில் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ மாணவர்களை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அது எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

செய்தி- குமார்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US