2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்
நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த வார இறுதியில் இலங்கை, அவுஸ்திரேலியா, நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு அவர் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை விஜயத்துக்கான சரியான திகதி தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
இலங்கை - நியூசிலாந்து உறவு
நியூஸிலாந்து ஊடக தகவல்களின்படி, பீட்டர்ஸ் மே 23 அன்று நியூசிலாந்திலிருந்து புறப்பட்டு மே 31 அன்று திரும்புகிறார் என கூறப்படுகிறது.
இதன்படி, 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைக்கு வரும் நியூசிலாந்து வெளியுறவு அமைச்சராக வின்ஸ்டன் பீட்டர்ஸ் விளங்குகிறார்.
நியூசிலாந்தும், இலங்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்பு மற்றும் வெலிங்டனில் உயர் ஸ்தானிகராலயங்களைத் திறப்பது உட்பட இருதரப்பு உறவை மேம்படுத்தியுள்ளன.
இந்தநிலையில், நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ - பசுபிக் பகுதிக்கு பங்களிக்க நியூசிலாந்து, பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பீட்டர்ஸ் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
