படுதோல்வியை நோக்கி துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை அணி நேற்று தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்னிங்ஸ் இடைநிறுத்தப்பட்டது.
கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கடும் பின்னடைவு
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சானது நியூசிலாந்து வீரர்களை குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க செய்துள்ளது.
தற்போது வரை நியூசிலாந்து அணி 335 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இதில் இலங்கை அணி சார்பாக நிஷான் பீரிஸ் 5 விக்கெட்டுக்களையும் பிரபாத் ஜெயசூரிய 2 விக்கெட்டுக்களையும் தனஞ்சய டி சில்வா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri

படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
