சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்தின் கொலின் முன்ரோ
இருபதுக்கு இருபது உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து (New Zealand) அணியில் இடம்பெறாததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கொலின் முன்ரோ (Colin Munro) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்குபெறாவிட்டாலும், நடைபெறவள்ள ரி20 உலகக் கோப்பைக்கு முன்ரோ தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
கிரிக்கெட் அணியின் சாதனை
இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களாக முழுநேர ஃபிரான்சைஸ் (Franchise) கிரிக்கெட்டை விளையாடுவதற்கான நகர்வை மேற்கொண்ட போதிலும், நியூசிலாந்துக்காக தனது 123 கறுப்புத் தொப்பிகளைச் (Black Caps) சேர்ப்பதை முன்ரோ கைவிடவில்லை.
முன்ரோ நியூசிலாந்துக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள் மற்றும் 65 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2018இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 47 பந்துகளில் சதம் அடித்துள்ளதோடு மூன்று சதங்கள் உட்பட குறுகிய காலத்தில் சிறந்த வீரராக திகழ்ந்துள்ளார்.இவரது சாதனை குறித்த காலப்பகுதியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சாதனையாக இருந்துள்ளது.
மேலும் கொலின் முன்ரோ இலங்கைக்கு எதிராக தொடரொன்றில் 14 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளதுடன் இது நியூசிலாந்து கிரிக்கெட்டின் பிளாக் கேப்ஸ் சாதனையாகவும் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |