நூற்றுக்கணக்கான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களை அழித்த நியூயோர்க் பொலிஸார்
நியூயோர்க் நகர பொலிஸார், சட்டவிரோத மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டேட்டன் தீவில் 200-க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அழிக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 5,700 ஆபத்தான சட்டவிரோத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத அதிகரிப்பாகும்.
சோதனை
கடந்த ஏப்ரல் (1)ஆம் திகதி புரூக்ளினில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒன்றில், சட்டவிரோத மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுட்டதில் 7 மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இத்தகைய வாகனங்களுக்கு எதிரான சோதனைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய வாகனங்கள் தொடர்ந்து அழிக்கப்படும் என்று நியூயோர்க் நகர அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam