2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை
நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை குளிர்காலப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடுமையான இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் 4.3 அங்குலம் (11 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசரகால நிலை
ஜனவரி, 2022க்குப் பிறகு இதுவே அதிகபட்சமான பனிப்பொழிவு என அந்நாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் 7.5 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.
புயலுக்கு முன்னதாக, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்திந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, சுமார் 1500இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் பயணிகள் கடும் சிரமத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.