நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டை வரவேற்கும் வழிபாட்டு நிகழ்வுகள்
2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இன்று (31.12.2024) நள்ளிரவு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.
கிளிநொச்சி
அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தேவாலயமான புனித திரேசாள் பேராலயத்தில் 2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றன.
அத்துடன், புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை பூஜைவழிபாடுகள், கிளிநொச்சி 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்திலும் நடைபெற்றுள்ளன.
செய்தி - யது
மட்டக்களப்பு
புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.
அத்துடன், மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா மற்றும் மணிக்கூண்டு கோபுரம் என்பன புத்தாண்டினை வரவேற்கும் வகையில் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு நகர் ஒளிமயமாக காட்சியளித்துள்ளது.
இதனை கண்டு களிப்பதற்காகவும் நள்ளிரவு புதுவருட பிறப்பின் போது நடாத்தப்படும் வாணவேடிக்கையினை கண்டுகளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நகரில் ஒன்றுகூடியிருந்தனர்.
செய்தி - குமார்










திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
