சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள்
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றிருந்தன.
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடத்தப்பட்டதை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.
பிலவ வருட சிறப்பு பூஜையினை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் நடத்தியிருந்தார்.
புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவவும், கோவிட் அச்சுறுத்தல் நீங்கவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.






மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam