நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள் (Photos)
மலர்ந்துள்ள ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நள்ளிரவில் கூட்டுத்திருப் பலி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
மேலும் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம் உட்பட பல பகுதிகளில் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பல இடங்களில் இசை நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
இதன்போது நள்ளிரவு 12மணியளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன் இவற்றினை கண்டுகளிப்பதற்காக பெருமளவு மக்கள் நகருக்குள் ஒன்றுகூடியிருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலும் சிறப்பு
வழிபாடுகள் நடைபெற்றன.
செய்தி- குமார்
ஹட்டன்
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் மலர்ந்துள்ள புத்தாண்டினை வரவேற்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
ஹட்டன் பிரதேசத்தில் வாழ் மக்கள் சமய சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவமளித்து மலர்ந்துள்ள புத்தாண்டில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி-மலைவஞ்சன்
வவுனியா
வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியார்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
செய்தி- திலீபன்
யாழ்ப்பாணம்
புத்தாண்டில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது பக்தர்கள் பலரும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டு சிறப்பித்துள்ளனர்.
செய்தி-தீபன்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் புத்தாண்டு பற்றிய நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டிய சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.
சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் போது ஆலய சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
