பிரித்தானியாவின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் இரத்து
பிரித்தானியாவில் (UK), புயல் காலநிலை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல பகுதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியா முழுவதும் புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் கடுமையான காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, பட்டாசு வெடித்தல் உட்பட பல நிகழ்வுகள் பாதுகாப்பு காரணங்களால் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பட்டாசு வெடித்தல் நிகழ்வுகள்
அத்துடன், பிரித்தானியாவின் பிளாக்பூல் (Blackpool), நியூகேஸில் (Newcastle), ஐல் ஆஃப் வைட் (Isle of Wight) மற்றும் ரிப்பன்(Ripon) போன்ற இடங்களில் திட்டமிடப்பட்ட பல பிரபலமான பட்டாசு வெடித்தல் நிகழ்ச்சிகள் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், எடின்பர்க்கில் (Edinburgh) நடைபெறும் புகழ்பெற்ற ஹோக்மனே (Hogmanay) திருவிழாவும் முன்னதாகவே இரத்து செய்யப்பட்டுள்ளது.
சஃபோல்க் (Suffolk) மாகாணத்தில் உள்ள லோஸ்டோஃப்டில் (Lowestoft), புத்தாண்டு தினத்தன்று நடைபெறவிருந்த இரண்டு பட்டாசு வெடித்தல் நிகழ்ச்சிகள் பாதுகாப்பை முன்னிட்டு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், கணிக்கப்பட்ட வானிலை நிலைமைகள் பங்கேற்பாளர்கள் மற்றும் நிகழ்வு பணியாளர்கள் இருவருக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியான வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
