சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்
அநுராதபுர மாவட்டத்தில் கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாகல, குடாஹெட்டாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாகல, குடாஹெட்டாவ பிரதேசத்தினை சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் இன்று (22) காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட தனது சகோதரருக்கு ஆதரவாக ஓடிய வேளையில் சிறுவன் திடீரென வீதியில் விழுந்துள்ளார்.
கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து உடனடியாக கலாவெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், பிரேத பரிசோதனை கெக்கிராவ வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
