புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்! மக்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 641 20 29 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரச்சினை
இவ்வாறு அனுப்பப்படும் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சி தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைத்து, உடனடி மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிந்து, தொடர் நடவடிக்கைகள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள், காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சு
இந்த செயல்முறை நேற்று(14) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சுற்றாடல் அமைச்சு இந்த புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களை ஈடுபடுத்துவதையும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடம் நேரடியாகக் கொண்டு செல்வத்தையும் நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam