வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
உலகின் மிகவும் பிரபலமான செயலியான வாட்ஸ்அப், வீடியோ அழைப்புகளை வசதியாக மாற்றும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
புதிய "ஸ்விட்ச் கேமரா" பயன்முறையானது, வீடியோ அழைப்பின் போது பயனர்கள் முன் மற்றும் பின் கேமராக்களை எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது.
தற்போது இப்புதிய அம்சம் iOS மற்றும் Android சாதனங்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வீடியோ அழைப்பின் போது கேமராக்களுக்கு இடையில் மாறுவதற்கான திறன், சில காலமாக பயனர்களால் கோரப்பட்ட ஒரு அம்சமாகும்.தற்போது ஒரே ஒருமுறை தொடுவதன் மூலம் கேமராக்களுக்கு இடையில் மாறுவதை சாத்தியமாக்கியுள்ளது.
வேலை அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அடிக்கடி வீடியோ அழைப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் புதிய அம்சம் பயனுள்ளதாக அமையும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri
