உலகில் பரவி வரும் புதிய வகை வைரஸ்: சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
கோவிட் வைரஸை விட ஆபத்தான மற்றுமொரு தொற்றுநோயை உலகம் விரைவில் எதிர்க்கொள்ளவுள்ளதாக இங்கிலாந்தின் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த புதிய வகை வைரஸிற்க்கு உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) இதற்கு Disease X என்று பெயரிட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளர்களின் எச்சரிக்கை
இந்நிலையில் இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
“தற்போது உருவாகியுள்ள புதிய வைரஸ் பேரழிவுகரமான “ஸ்பானிஷ்” காய்ச்சலைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அத்துடன் இந்த வைரஸ், பற்றீரியா அல்லது பூஞ்சையாக இருக்கலாம் எனவும் இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதுள்ள பல வைரஸ்களில், இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவ கூடியது. குறித்த வைரஸானது தற்போது அதன் தாக்கத்தை தொடங்கியிருக்கலாம்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |