பிரியந்த படுகொலை விவகாரம்! - புதிய காணொளிகள் வெளியாகின
இலங்கையரான பிரியந்த குமார கடந்த மாதம் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்ட சியால்கோட் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து புதிய சிசிடிவி காணொளிகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pakistan Observer வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் மேலாளரான பிரியந்த குமார, தொழிலாளர்கள் இருவர் தனக்கு அருகில் நின்று கொண்டு ஒரு ஸ்டிக்கரை கிழித்து எடுப்பதை காணொளி காட்டுகிறது.
தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் இருந்து இந்த காட்சிகள் பெறப்பட்டுள்ளன. குமார, தொழிற்சாலையின் மேற்கூரையில் கோபமடைந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயல்வதைக் மற்றுமொரு காணொளி காட்டுகின்றது.
எனினும், ஒரு தொழிலாளி கூரையில் மறைந்திருப்பது மற்றொரு காணொளியில் பதிவாகியுள்ளது. ஆவேசமடைந்த கும்பல் பிரியந்த குமாரவை கூரையின் மேல் வைத்து தாக்குகின்றனர்.
மூன்றாவது காணொளியில், தொழிற்சாலை நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர், தொழிலாளர்கள் மேலாளரைத் தாக்குவதைத் தடுக்க முயற்சிப்பதைக் காட்டுகின்றது.
எனினும், வன்முறைக் கும்பல் அதைக் கேட்கவில்லை, மேலும் சிலர் வன்முறையைத் தூண்டுடியதால் பிரியந்த குமாரைத் தொடர்ந்தும் தாக்கியுள்ளனர். எவ்வாறாயினும், தொழிற்சாலையின் மூன்று இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
பாகிஸ்தானில் அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் : உடன் பணி புரிந்தோரின் கொடூரச் செயல்

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
