டுவிட்டர் வெளியிட்டுள்ள அதிரடியான விதிகள்
சமீப காலமாக டுவிட்டர் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பல அம்சங்களை வெளியிடுகின்றது.
அந்த வகையில் தற்போது புதிய விதி ஒன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பின் உறுதிப்பாடு
அந்தவகையில் டுவிட்டர் பதிவொன்றை பார்வையிட வேண்டுமெனில் டுவிட்டரில் பதிவுசெய்த (sign up) பிறகே பார்வையிடக்கூடியவாறு திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்காலமும் டுவிட்டரில் கணக்கு இல்லாமலே டுவிட்டருக்குள் உள்நுழைந்து பதிவுகளை பார்க்க முடியும்.
ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள திருத்தத்தின்படி குறித்த நபருக்கு டுவிட்டர் கணக்கு இருந்தால் மட்டுமே உள்நுழைந்து பதிவுகளை பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுகளின் எண்ணிக்கை
இதேவேளை பதிவுகளுக்கான அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதாவது பதிவுசெய்யப்பட்ட ஒருவர் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளை வாசிக்க முடியும்
Rate limits increasing soon to 8000 for verified, 800 for unverified & 400 for new unverified https://t.co/fuRcJLifTn
— Elon Musk (@elonmusk) July 1, 2023
பதிவு செய்யப்படாத நபர் ஒருநாளைக்கு 600 பதிவுகளும் புதிதாக ஆரம்பிக்கபட்ட கணக்கு எனின் 300 பதிவுகளை மட்டுமே நாளொன்றுக்கு வாசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரையறை கூடிய விரைவில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |