பயிர்களுக்கு சேதங்களை விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்த தயாராகும் புதிய பிரிவு
இலங்கையில் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு காண, விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, ஒரு சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது.
இந்த முயற்சியானது நிலையான கட்டுப்பாட்டுக்கான பல உபாயங்களை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நேற்று (21.11.2024) இடம்பெற்றுள்ளது.
கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
தேங்காய் மற்றும் பழங்கள் போன்ற முக்கிய பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் டோக் குரங்குகள் மற்றும் பிற விலங்குகளை கட்டுப்படுத்த நிலையான நடவடிக்கைகளை அடையாளம் காண்பது குறித்து, இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

இந்தநிலையில், உடனடி மற்றும் செயற்படக்கூடிய வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான திட்டங்கள் கலந்துரையாடலின்போது பேசப்பட்டுள்ளன.
விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், விவசாய திணைக்களம், விவசாய ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உட்பட சுமார் 15 நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri