ஐ.நாவின் புதிய பிரேரணை: அரசின் நிலைப்பாடு என்ன..!
"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடர் ஆரம்பமாக முன்னர் அல்லது அதற்கிடைப்பட்ட காலப் பகுதியில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு அறிவிக்கும்."என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்கள்
அவர் மேலும் கூறுகையில்,"கடந்த ஆண்டுகளில் எமது நாட்டில் காணப்பட்ட ஜனநாயக மீறல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிலைமை தற்போது கணிசமானளவு மாற்றமடைந்துள்ளது என்று சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் அந்த அடிப்படையிலேயே அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று அவர்கள் தரப்பில் சில கண்காணிப்புக்களும் காணப்படுகின்றன. அரசும், வெளிவிவகார அமைச்சும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பமாக முன்னர் அல்லது அதற்கிடையில் இது தொடர்பில் அரசு அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும்."என தெரிவித்தார்.



