இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உணவு
இலங்கையில் வித்தியசமான முறையில் பட்டர் தயாரிக்கும் முயற்சி வெற்றி அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் பாலில் இருந்து பட்டர் தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாக தென்னை ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது.
பட்டர் உற்பத்தியின் ஆரம்ப கட்ட பணிகள் வெற்றியடைந்துள்ளதுடன், சந்தையிலும் இதற்கு அதிக கோரிக்கை விடுக்கப்படும் என சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தேங்காய் பாலில் இருந்து ஜேம் போன்றவை தயாரிக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் சீஸ் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பொருட்களுக்கு உலகில் புதிய சந்தையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri