உக்ரைனில் புதிய வகை கொரோனா! நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு ஆபத்தா
உக்ரைன் நாட்டிலும் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று 5 பேருக்கு பரவியுள்ளதாக வைத்திய ஆய்வக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த கொரோனா வகையை அறிந்து கொள்வதற்கான வசதி இலங்கையில் இல்லை என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு அழைத்து வருவதென்றால் கொரோனாவின் புதிய வகையை அறிந்து கொள்ளும் சாதனங்களை நாட்டுக்கு கொண்டு வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்குள் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு எந்த வகையான கொரோனா பரவியுள்ளதென இன்று வரையில் தெரியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளன.
முன்னர் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸை விட, உருமாற்றம் பெற்ற புதிய வைரஸ் பல மடங்கு வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.