அனுர பங்குபற்றும் நிகழ்வுகளில் நவீன சிசிரிவி கமராக்கள்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க (Anura Kumara Dissanayaka) பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அண்மைய காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிரிவி கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க சிசிரிவி கமராக்கள் பல ஆங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு வருபவர்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்விலும் இவ்வாறான கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விசேட பரிசோதனைகள்
அது மாத்திரமன்றி, காரைதீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் அக்கட்சியின் கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான கமராக்கள் பல பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை, நடத்தப்படும் கூட்டங்களுக்கு பைகளுடன் சமூகமளிப்பவர்கள் அழைக்கப்பட்டு விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 








 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        