இலங்கையில் AI தொழிநுட்பத்தில் இணைக்கப்பட்ட நோயாளர்காவு வண்டி
இலங்கையின் இலவச நோயாளர்காவு வண்டி சேவையான 1990 Suwa Sariya, நோயாளர்காவு வண்டி மற்றும் மருத்துவரை AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் நோயாளர் காவு வண்டி சேவையாக மாறியுள்ளது.
முன்னதாக, இந்த ஒருங்கிணைப்பு தொலைபேசியில் செய்யப்பட்டது.
'இணைக்கப்பட்ட நோயாளர்காவு வண்டி' உயிர்களைக் காப்பாற்றும் சுவ சரியவின் பணியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னோடி திட்டம்
சுவா சரியாவின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முதலில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுவ சரிய ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 10,000 ரூபா வழங்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
