இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கத்தை காட்டிய மக்கள்
இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், சீகிரியாவில் இரவை கழிப்பதற்கான ஒரு புதிய முறையை உள்ளூர் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சீகிரியாவை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதால், சீகிரியாவில் உள்ள வெளிநாட்டினர் யாரும் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
எனினும், உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குவதற்கும், இரவைக் கழிப்பதற்கும் தகுந்த ஏற்பாடுகளை செய்துக் கொடுத்துள்ளனர்.
இதனால் சீகிரியாவில் ஒரு அழகான இரவைக் கழிக்கவும், உள்ளூர் உணவை அனுபவித்து பாடல் பாடி மகிழ்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும் சீகிரியா இரவில் சுற்றுலா சொர்க்கமாக மாறியுள்ளது.
பொழுதுபோக்கு
வீட்டில் சமைத்த உணவு, காய்கறிகள், பழங்களை வழங்குதல் மற்றும் இரவுக்கான உள்ளூர் உணவை வழங்குதல் ஆகியவை சீகிரியாவின் உள்ளூர் மக்களுக்கு பல பொருளாதார நன்மைகளைத் தரும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக இளம் வெளிநாட்டு சுற்றுா பயணிகள் சீகிரியாவில் தங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் பொழுதுபோக்குக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தினால், ஏராளமான வெளிநாட்டினர் சீகிரியாவிற்கு வருவார்கள் என அந்தப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.















