வேகமாக வாகனங்களை செலுத்துவோரை கண்டுபிடிக்க அறிமுகப்படுத்தப்படும் வேகத் துப்பாக்கி
அதிவேக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் முயற்சியில், இலங்கை பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, 91 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்பான வேக துப்பாக்கி சாதனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த சாதனங்கள் வேக வரம்பை மீறும் ஓட்டுநர்களைக் கண்டறிய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல் கட்டமாக, நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் மேற்கு மாகாண போக்குவரத்து பிரிவினரிடம் 30 வேக துப்பாக்கிகள், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் போக்குவரத்து பிரிவுகள்
இந்தநிலையில் அடுத்தக்கட்டமாக இந்த சாதனங்கள் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்த புதிய வேகக் கண்டறிதல் துப்பாக்கி சாதனத்தை பயன்படுத்துவது குறித்து பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லேசர் தொழில்நுட்பத்தால் பயன்படுத்தும் இந்த வேகத் துப்பாக்கிகள், பகல் மற்றும் இரவு போக்குவரத்து நடவடிக்கைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில், இலங்கையில் 24,589 போக்குவரத்து விபத்துக்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 2,253 பேர் உயிரிழந்தனர். அத்துடன், வேகமாக வாகனம் ஓட்டியதாக 31,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan