பிரித்தானியாவில் திருமண நிகழ்வுகளுக்கான புதிய விதிமுறைகள்! - அரசு வெளியிட்ட அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் - 19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் 29ம் திகதி இரண்டாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.
இது குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்று வேகமாக பரவிய நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன்படி, மார்ச் 8ம் திகதி முதல் பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் எதிர்வரும் 29ம் திகதி முதல் இரண்டாம் கட்ட தளர்வுகள் அமுலாகவுள்ளன. அந்த வகையில், எதிர்வரும் 29ம் திகதிக்கு முதல் வெளிப்புறங்களில் ஆறு பேர் வரையில் ஒன்றுகூட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இரு வீடுகளில் இருந்து ஆறுக்கும் அதிகமானவர்கள் சந்திக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற விளையாட்டு மைதானங்கள் மீளவும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணங்களுக்கான புதிய விதிகள் வெளியீடு
பிரித்தானியாவில் திருமண நிகழ்வுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தற்போது, பிரித்தானியாவில் விதிவிலக்கான சூழ்நிலைகளில் திருமணங்கள் மற்றும் உள்ளூர் விழாக்கள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது,
மேலும் இதுபோன்ற நிகழ்வுகளில் ஆறு பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும். இந்நிலையில், திருமணங்களுக்கான கட்டுப்பாடுகளை படிபடியாக தளர்த்தும் திட்டங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மார்ச் 29 முதல் திருமண விழாக்கள் இனி விதிவிலக்கான சூழ்நிலைகளுக்கு கட்டுப்படுத்தப்படாது, ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.
ஆறு பேர் அல்லது இரண்டு வீடுகள் வரை சிறிய கூட்டங்கள் பங்கேற்கலாம். ஏப்ரல் 12 முதல் கொரோனா குறைவாக இருக்கும் பாதுகாப்பான இடங்களில் நடக்கும் கொண்டாட்டங்களில் 15 பேர் வரை பங்கேற்கலாம், மேலும் அவர்கள் ஒரு வெளிப்புற இடத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம்.
அது ஒரு தனியார் இடமாக இருக்கக்கூடாது.
17 மே முதல் 30 பேர் வரை பங்கேற்கலாம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் கொரோனா குறைவாக இருக்கும் பாதுகாப்பான இடங்களில் வீட்டுக்குள் நடக்க அனுமதிக்கப்படும்.
ஜூன் 21 முதல் திருமணங்கள், உள்ளூர் விழாக்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைது கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.