கனடாவிற்கான எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம்
2025ஆம் ஆண்டு முதல் கனடாவில் வேலை வாய்ப்புக்கான கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயன்முறை மாற்றத்தின் மூலம் கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவு(Express Entry) முறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சில பணிகளில் அந்நாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக வெளிநாட்டவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவம்
இதற்கு தேவையான ஆவணமாக 'LMIA'(Labour Market Impact Assessment) உள்ளது. தற்போது, எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வருமானால், ஆவணங்களை சட்டவிரோதமாக வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எக்ஸ்பிரஸ் நுழைவு முறை மூலம் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறும் விண்ணப்பதாரர்களின் வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவம் குறைக்கப்படும்.
இதேவேளை, இந்த மாற்றம் கனடாவில் தற்காலிகமாக வேலை செய்து வரும் வெளிநாட்டவர்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை வேலையொப்பத்துடன் விண்ணப்பித்தவர்கள் அல்லது நிறுவனத்தால் அழைக்கப்பட்டவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan