இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க புதிய தீர்மானம் வேண்டும்! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

-to-the-international-criminal-court-
By Independent Writer Feb 24, 2021 07:54 AM GMT
Report

போரின் போதோ அதற்குப் பின்னரோ தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையினை புரிந்தவர்கள் எவருக்கும் தண்டனையோ, எதிரான வழக்கோ தொடரப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ள தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழர்களுக்கு, அடுத்தடுத்த நிகழ்ந்தேறிய நிகழ்வுகள், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிவாக நிரூபித்திருந்ததோடு, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் தமது புவிசார் அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டு தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த விடயத்தினை வெளிக்காட்டிய 2012 வெளிவந்த ஐ.நா. உள்ளக மறுஆய்வு அறிக்கையை வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

இன்று, இலங்கை தொடர்பாக முகன்மை குழு ஐ.நாவில் சமர்ப்பித்த ஆரம்ப தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூச்சிய வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது என்பதோடு, நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம்.

2009ஆம் ஆண்டு பெரும் இனப்படுகொலையொன்றின் ஊடாக தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான அரசியல்வெளி என்ற நிலையில், தமிழர்கள் மீண்டும் சர்வதேச நிறுவனங்களை, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக திரும்பவும் நாடினார்கள் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

போரின் போதோ அதற்குப் பின்னரோ தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையினை புரிந்தவர்கள் எவருக்கும் தண்டனையோ, எதிரான வழக்கோ தொடரப்படவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குஇலங்கைவை பரிந்துரைப்பதன் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஐ.நா உயர் ஆணையாளர் பேரவைக்கு அனுப்பிய தனது அறிக்கையில்,இலங்கைவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்குமாறு உறுப்புநாடுகளை வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர்கள், முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும்இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்களின் நிபுணர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என கடந்த பெப்ரவரி 18ம் நாளன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமென ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளனர். இந்த கோரிக்கை சமீபத்திய P2P பேரணியில் (பொத்துவில் முதல் பொலிகண்டி வரை) பல்லாயிரக்கணக்கான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

2011ம் முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இக்கோரிக்கையினை ஐ.நாவுக்கான மனுவில் தெரிவித்திருந்ததோடு, ஒரு மில்லியன் கையொப்பங்களை பெற்று வலியுறுத்தி 2015ஆம் ஆண்டில் வலியுறுத்தியிருந்தது.

இலங்கை தொடர்பான முகன்மை குழு சமர்ப்பித்த ஆரம்ப (Zero Draft Resolution) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை பொறப்புக்கூற வைப்பதில் தோல்வியடைகிறது.

நீதிக்காக போராடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூச்சிய (Zero) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது. இதனால் நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம்.

பேரவையின் கடமைகளையும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான உலகளாவிய அறைகூவலை பூர்த்தி செய்யவும் ஒரு புதிய தீர்மானத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறது.

இந்த அமர்வு 'மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் மிக உயர்ந்த நியமங்களை நிலைநிறுத்துவது', 'மனிதனின் முழுமையான செயல்பாட்டை ஊக்குவித்தல்' உள்ளிட்ட நோக்கத்தையும் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதோடு மேம்படுத்துதல், 'நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளை காக்கும் கடமைகள்','மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு பங்களிப்பு செய்தல்' ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஆளானவர்கள் நீதிக்காக மனித உரிமைகள் பேரவையையே நாடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US