சுவிற்சர்லாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்! வெளியான அறிவிப்பு

Covid Switzerland
By Dias Feb 03, 2022 07:40 PM GMT
Report

வீட்டில் இருந்தபடி பணி செய்ய வாய்ப்புள்ளோருக்கு (Homeoffice), வீட்டில் இருந்தபடி பணியாற்ற பணிக்கப்பட்ட ஆணை சுவிஸ் அரசால் நீக்கப்பட்டுள்ளது.

அதுபோல் 17. 02. 2022 முதல் தடுப்பூசி சான்று மற்றும் சுகாதார முகவுறை அணியும் கட்டாயத்தில் இருந்து விடுப்பு அறிவிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெருநோய்த்தொற்று பரவியத்தின் நிலத்திணை (endemic) கண்பார்வைக்குத் தெரிவதாக சுவிற்சர்லாந்து நடுவனரசின் நலவாழ்வு (சுகாதார) அமைச்சர்  அலான் பெர்சே தெரிவித்துள்ளார்.

இதன் பயன் சுவிஸ் அரசு தற்போது கடைப்பிடிக்கும் சிறுமுடக்க நடவடிக்கைகள் முழுமையாக நீக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும், நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மகுடநுண்ணித்தொற்றுக்கு (கோவிட்-19) ஆட்பட்டோர் தொகை அளப்பெரியதாயினும், தொற்றுக்கு உள்ளானவர்கள் தொகையில் மருத்துவமனையில் தங்கி பண்டுகம் (வைத்தியம்) பெற்றோர் விகிதம் மிக குறைவு என்ற அடிப்படையிலும், மருத்துவமனைகள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகாத சூழல் நிலவுவதாலும், இத்தளர்வு வர வாய்ப்புள்ளதாக இன்றைய ஊடக சந்திப்பில் சுவிஸ் அரசால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து நலவாழ்வு அமைச்சர் பெர்சே மேலும் பேசுகையில்,

இந்த கும்பத்திங்கள் (பெப்ரவரி) 2022 உடன் நாம் ஈராண்டுகளாக பெருந்தொற்று இக்கட்டு நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றோம். தற்போது தான் இதிலிருந்து விடுபடும் காட்சி தெரிகின்றது என்றார்.

நோய் எதிர்ப்புத்திறனூட்டல் 

தற்போதைய தளர்வுக்கான நம்பிக்கைக்கு சுவிஸ் வாழ் மக்கள் மகுடநுண்ணித் தொற்று நோய்க்கு எதிரான எதிர்ப்புத் திறனை பெற்றிருப்பதே ஆகும்.

கடந்த ஈராண்டுகளில் நோய்த் தொற்றுக்கு ஆட்பட்டு குணமடைந்தவர்களும், தடுப்பூசி மற்றும் ஊக்கி (Booster) ஊசி பெற்றுக்கொண்டு பெருமளவு மக்கள் நோய் எதிர்ப்புத் திறனூட்டப்பட்டவர்களாக உள்ளார்கள்.

திரிபடைந்த மகுடநுண்ணிகளில் ஒமிக்ரோன் வகை விரைந்து பரவினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைவாக உள்ளது. ஆகவே தற்போதைய நிலையை சுவிற்சர்லாந்து அரசு தொற்றுப் பரவியத்தின் நிலத்திணையாக, அதாவது பெருந்தொற்று நிறைவடையும் காலமாக நோக்குகின்றது.

முடக்க வெளியேற்றக்கால அட்டவணை 

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் வீடுகளில் இருந்து பணிசெய்யும் ஆணை (Homeoffice) மீளப் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

அதுபோல் நோய் தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விதியும் நீக்கப்படுகின்றது.

ஆனால் வீடுகளில் இருந்து பணி ஆற்றும் ஆணை எனும் முறையில் இருந்து முன்மொழிவு எனும் பதமாக சுவிஸ் அரசால் மாற்றப்படுகின்றது.

இதன் பொருள் ஒவ்வொரு நிறுவனமும் தாமாக தான் விருப்பில் முடிவெடுக்கலாம். உரிய நலவாழ்வு முறைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும், நுண்ணி நீக்கிகளை பயன்படுத்தி தமது பணியாளர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாது காக்கும் பொறுப்பும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொடர்ந்தும் இருக்கும்.

மறு அறிவிப்பு வரும் வரை பணியிடங்களிலும் முகவுறை தொடர்ந்து அணிந்திருக்க வேண்டும். நோய்த்தொற்றுக்கு ஆளானவருடன் தொடர்பு இருந்திருப்பின் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனும் விதியும் விலக்கப்படுகின்றது.

இவ்விதி முன்னர் (12.01.22ல்) சுவிஸ்சர்லாந்து அரசினால் 5 நாட்களாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்து. ஒருவர் மகுடநுண்ணித்தொற்றிற்கு ஆளானது எதிர்ப்புத் திறனூட்டி (அன்ரிக்கென்) பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின், நோயாளர் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விதி தொடரும்.

முடக்கத்திலிருந்து சுவிஸ் வெளியேறும் இருவகை நிகழ்நிலவரம்

09. 02. 2022 வரை மாநில அரசுகளுடனும் துறைசார் வல்லுனர் குழுவுடனும் கலந்து ஆய்ந்து உரிய முடிவு 16. 02. 2022 அறிவிக்கப்படும். 16. 02. 2022ல் நிலவும் மீ.மு.க.டு (நோய்த்தொற்று உச்சநிலை) சூழலிற்கு ஏற்ப அறிப்பு அமையும்.

வகை 1

அனைத்து வகையான மகுடநுண்ணித்தொற்று நடவடிக்கைகளும் உடனடியாக நீக்கப்பட்டு முழுத்தளர்வு 17. 02. 2022 முதல் அறிவிக்கப்படும்.

பெருந்தொற்று உச்சம் முழுமை அடைந்து இதனைத்தாண்டி இன்னும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை எனும் நிலையிலும், சுவிஸ் வாழ் மக்கள் அனைவரும் போதிய நோய் எதிர்ப்புத் திறனை பரவலாக கொண்டுள்ளார்கள்.

மருத்துவமனைகள் அனைத்து நெருக்கடிகளையும் தாண்டிவிட்டன, நலவாழ்வுத்துறை அமைப்புக்கள் அழுத்தமற்று இயல்பான நிலையில் உள்ளன எனும் உறுதியும் கிடைத்த நிலையில் இவ்வாறான அறிவிப்பு அறிவிக்கப்படலாம்.

இவ்வாறான நிலையில் தளர்த்தப்பட்டு நீக்கப்படும் முடக்கக்கட்டுப்பாடுகள் இவை ஆகும். உணவகங்களில், நிகழ்வுகளில் அல்லது பொழுதுபோக்கு-, பண்பாட்டு நிறுவனங்களில் தற்போது உள்ள தடுப்பூசிச்சான்று காட்ட வேண்டிய கட்டாயம் முழுமையாக நீக்கப்படும்.

பொதுப்போக்குவரத்திலும், அனைத்துக் கடைகளிலும், பொது இடங்கிலும், உள்ளரங்குகளிலும் தற்போது நடைமுறையில் உள்ள முகவுறை அணியும் கட்டாயம் நீக்கப்படும்.

தனி ஆட்கள் தனிப்பட்டு ஒன்று கூடுவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஆட்தொகைக்கட்டுப்பாடு நீக்கப்படும்.

நிகழ்வுகளுக்கு அரசிடம் ஒப்புதல் பெறவேண்டிய நடைமுறை நீக்கப்படும். மிகப்பெரும் நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்பன தொடர்ந்து இருக்கும், அதற்கான சிறப்பு விதிகள் உருவாக்கப்பட வேண்டியிருக்கும்.

மகுடநுண்ணித்தொற்றுப் பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய விதியும் தொடரப்படும், அதுபோல் பிறநோயின் பாதிப்பில் இருப்பவர்களுக்கு மகுடநுண்ணித் தொற்று ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள புதிய விதிகள் அமைக்கப்படும்.

வகை 2 

முடக்க நடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்படும்

16. 02. 2022 முழுமையாக முடக்கங்களை நீக்க முடியாத சூழல் நிலவுமானால், இவ்வகை முறையில் சுவிற்சர்லாந்தின் நடுவனரசு இவ்வாறு தளர்வுகளை 17. 02. 2022 முதல் அறிவிக்கும்.

உணவகங்களில், நிகழ்வுகளில், பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் தடுப்பூசிச்சான்று காட்டத்தேவையில்லை. ஆனால் உணவகங்களில் இருக்கையில் இருந்தபடியே உணவு உண்ண ஒப்புதல் வழங்கப்படும்.

தனிஆட்களின் விழாக்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் நடைமுறைகள், ஆட்தொகைக் கட்டுப்பாட்டு வரைமுறைகள் நீக்கப்படும். பொதுவெளியரங்கில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள அரச இசைவாணை (பெர்மிற்) பெறவேண்டிய கட்டாயம் நீக்கப்படும்.

தற்போது 2ஜி பிளஸ் (2G+) நடைமுறையில் உள்ள இடங்களுக்கு (நடனவிடுதி, நீச்சல்தடாகம், தீவிர விளையாட்டுப்பயிற்சி, ஊதும் இசைக்கருவிப்பயிற்சி போன்ற) 2 ஜி (2G) முறைப்படுத்தப்படும்.

இதன் பொருள் தடுப்பூசி இட்டிருக்க வேண்டும் அல்லது மகுடநுண்ணி நோய்த்தொற்றுக்கு ஆளாகி குணமடைந்திருக்க வேண்டும். இதன் பிறகு காலச் சூழலிற்கு ஏற்ப மீண்டும் ஆராய்ந்து, ஏனைய முடக்கங்கள் பிறிதொரு காலத்தில் படிப்படியாக நீக்கப்படும்.

மகுடநுண்ணித் தனிவகை அமைவு விதிச்சட்டம் (Covid-19-Verordnung besondere Lage) இறுதியாக நீக்கப்படும். சுவிசில் முழு முடக்கம் நீக்கப்படுமா? இரண்டு ஆண்டுகள் கடந்து இயல்பு மீண்டும் திரும்புமா? 16. 02. 2022 பதில் கிடைக்கும், இதுவரை பொறுத்த நாம் அதுவரை பொறுத்திருப்போம்!

தொகுப்பு: சிவமகிழி   

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US