கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 17,214.39 புள்ளிகளாக பதிவாகியதுடன், இது 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பதிவான முந்தைய அதிகபட்சமான 17,193.8 புள்ளியை முறியடித்துள்ளது.
இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 234.50 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
நிதி நிறுவனங்களின் பங்கு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு காரணமாவதுடன், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, DFCC வங்கி, சென்றல் பினேன்ஸ் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு அதிக பங்களிப்பை வழங்கியது.
இதன்படி பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.37 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 18 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
