உலக வங்கியின் மூலமாக நுவரெலியாவில் புதிய வேலைத்திட்டம்: எஸ். பீ. திஸாநாயக்க உறுதி
உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் நவீன முறையில் மரக்கறி, மலர்கள், பழங்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டடுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவருமான எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஹெல்பையின் சுற்றுலா விடுதியில் இன்று (28) நடைபெற்ற விவவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நான்கு விவசாய சங்கங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் 60 கூடாரங்கள் ( 60 டனல்கள்) அமைத்து தேசிய மற்றும் வெளிநாடுகளுக்கு தேவையான மரக்கறி, மலர்கள், பழங்கள், விதை உருளைக் கிழங்கு உற்பத்தி செய்வதற்கு எதிர் பார்க்கின்றோம்.
நுவரெலியா, வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை மற்றும் அம்பகமுவ பொன்ற பிரதேசங்களில் இந்த கூடாரங்கள் அமைக்கப்படுவதுடன் நான்கு விவசாய சங்கங்களை இணைத்துக்கொண்டு இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஒரு டனல் அமைப்பதற்கு 15 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. அதில் 10 இலட்சம்ரூபா உலக வங்கியில் எதிர் பார்த்துள்ளோம். இத்திட்டத்தில் இணைந்துக்கொள்ளும் விவசாய சங்கதினூடாக ஒவ்வொரு கூடாரத்திற்கும் விவசாய சங்கங்கள் மூலம் 6 இலட்ம் ரூபா முதலீடு போட வேண்டும்.
இந்த விவசாய சங்கங்களும் எவ்வாறு செயல்பட வேண்டும். இந்த சங்கங்கள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும். என்பதைப் பற்றி இன்று கலந்துரையாடப்பட்டது. இந்த கூடாரங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் குத்தைகாரர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்து உற்பத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்தி- திவாகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri