கசிப்பை கட்டுப்படுத்த அறிமுகமாகும் புதிய உற்பத்தி குறித்து, எச்சரிக்கும் வல்லுநர்கள்
கசிப்பு போன்ற சட்டவிரோத மதுபான பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், குறைந்த விலை மதுபான தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் மதுவரித் திணைக்களத்தின் திட்டத்தை மருத்துவ வல்லுநர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இது சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, மது நுகர்வுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கை என்று, அவர்கள் கூறியுள்ளனர்.
2014, டிசம்பரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) உட்பட பொதுமக்கள் மற்றும் தொழில்முறை எதிர்ப்பை மீறி, 2015, மார்ச் 9 அன்று பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழு (COPF) கூட்டத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மதுபான பயன்பாடு
இந்த நிலையில், மலிவான, குறித்த தயாரிப்பு, சட்டவிரோத மது பயன்பாட்டைக் குறைக்கும், அரச வருமானத்தை அதிகரிக்கும், மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்று அதிகாரிகள் வாதிடுகின்றனர்.

இருப்பினும், மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) இத்தகைய நடவடிக்கைகள் வரலாற்று ரீதியாக மது பயன்பாட்டை அதிகரிக்கவே வழிவகுத்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த கால அனுபவங்களை மேற்கோள் காட்டி, 1996 இல் 50% பீர் வரி குறைப்பு பீர் நுகர்வு 200% அதிகரிப்பதற்கு வழிவகுத்தது.
அதேநேரம் சட்டவிரோத மதுபான பயன்பாட்டை குறைக்கவில்லை என்பதை மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் எடுத்துக்காட்டியுள்ளது.
மதுபான வரிகள்
எனவே, இந்த நடவடிக்கை முதன்மையாக நுகர்வோரை அதிக வரி விதிக்கப்பட்ட மதுபானத்திலிருந்து மலிவான தயாரிப்புக்கு மாற்றும், இறுதியில் அரச வரி வருவாயைக் குறைக்கும் அதே வேளையில் ஒட்டுமொத்த மது நுகர்வையும் அதிகரிக்கும் என்றும் அந்த மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ஆராய்ச்சியை எடுத்துரைத்து, அதிக மதுபான வரிகள் நுகர்வு மற்றும் தொடர்புடைய தீங்குகளைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள உத்தி என்றும், தகவல் மையம் வலியுறுத்துகிறது.
ஆகவே, வரிவிதிப்புகளை நடைமுறைப்படுத்தல், சட்டவிரோத வர்த்தகத்தை குறைத்தல் மற்றும் தொழில்துறை நலன்களைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக பொது சுகாதார முன்னுரிமைகளுடன் கொள்கைகளை சீரமைப்பதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri