விமான பயணங்களின் போது நடைமுறைப்படுத்தப்படும் புதிய நடைமுறைகள்
விமானங்களில் பயணிக்கும் போது மொன்றியல் பணிமுறை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விமான பயணங்களின் போது இடம்பெறுகின்ற குற்றங்கள் மற்றும் ஏனைய செயல்கள் தொடர்பான சமவாயத்தைத் திருத்தம் செய்வதற்கான பணிமுறை விதிக்கோவையை நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
விமானங்களில் இடம்பெறுகின்ற குற்றங்கள் மற்றும் சில ஏனைய செயல்கள் தொடர்பான சமவாயத்தைத் திருத்தம் செய்வதற்கான பணிமுறை விதிக்கோவையின் திருத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும், குறித்த பணிமுறை விதிக்கோவையின் ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்புடைய வகையிலான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
