காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை
கோவிட் -19 தடுப்பூசி ஏற்றிய அட்டையை வைத்திருப்போர் மாத்திரமே பொலிஸ் நிலையத்தினுள் தேவைகளைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் இவ்வாறு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தேவைகளை நிறைவேற்ற முறைப்பாடுகளைப் பதிவு செய்ய ஏனைய தேவைகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு ஏற்றப்பட்ட கோவிட் தடுப்பூசி அட்டையை கையோடு எடுத்து வரவேண்டும். அவ்வாறு தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
பொலிஸ் நிலைய நுழைவாயிலில் தடுப்பூசி ஏற்றிய அட்டையை பொலிஸார் பரிசோதித்து வருவதுடன், அட்டையை எடுத்து வராதோர் வீடுகளுக்குச் சென்று அட்டையை எடுத்து வந்து காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.





50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam