நாட்டில் மருத்துவத் துறையில் உருவாகியுள்ள புதிய சிக்கல்
சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் (Sodium bicarbonate) ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும், உடலுறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் வைத்தியர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மயக்கவியல் நிபுணர்கள்
சோடியம் பைகார்பனேட் தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க இரண்டு ஆண்டுகளானதே சோடியம் பைகார்பனேட் தடுப்பூசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து இறக்குமதி செய்யுமாறு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் மற்றுமொரு நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதிலும், இதுவரை எவ்வித அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசியின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் வினோதனி வணிகசேகர, “நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைக்கு இந்த மருந்து தேவை. சிக்கல்கள் ஏற்பட்டால், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது சோடியம் பைகார்பனேட் தேவைப்படுகிறது.
இது நோயாளிகளின் இரத்தத்தில் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது.
எனினும், அன்றாட தேவைக்கு பயன்படும் மருந்து அல்ல.ஆனால் இக்கட்டான சூழ்நிலைகளின் போது, அது அவசியமாகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam