கட்டுமானப் பொருட்களை நியாயமான விலையில் வழங்க புதிய திட்டம்
மக்களுக்கு நியாயமான விலையில் கட்டுமானப் பொருட்களை வழங்குவதற்கு விலை சூத்திரம் போன்ற "மதிப்பீட்டு விலை வரம்பை" வர்த்தக அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன்படி சிமெந்து(cement), வர்ணப்பூச்சு(paint) ,உருக்கு கம்பிகள் (steel) மற்றும் மின் வயர்கள் (electrical wires) உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு மதிப்பிடப்பட்ட விலை வரம்பு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கம், நிதி அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகியவை இறக்குமதி வரிகள், சுங்க வரிகள் மற்றும் பிற இறக்குமதி கட்டணங்களை கருத்திற்கொண்டு புதிய விலை வரம்பை அங்கீகரித்துள்ளன.
அதன் பிறகு, நுகர்வோர் குறிப்பிட்ட பொருளின் உண்மையான விலையை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே மதிப்பிடப்பட்ட விலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விலை வரம்பு புதுப்பிக்கப்படும்.
இதேவேளை ஒரு வர்த்தகர் நியாயமற்ற விலையை நிர்ணயிக்கும் போது, நுகர்வோர் விவகார ஆணையத்திடம் புகார் செய்யலாம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வர்த்தகர்கள் அதிக லாபம் ஈட்டுகிறார்களா என்ற தகவலையும் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
