வெளிநாடொன்றில் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்து - பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஜப்பான் (Japan) கடற்படையின் 2 ஹெலிகொப்டர்கள் (Helicopters) விபத்துக்குள்ளானாதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகொப்டர் விபத்து நேற்று (20.4.2024) நள்ளிரவு நடந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா (Defense Minister) தெரிவித்துள்ளார்.
எட்டு குழுவினர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர்கள் (Helicopters) விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஹெலிகொப்டர்களின் தொடர்பு துண்டிப்பு
விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஜப்பான் (japan) நாட்டின் கடசார் தற்காப்பு படையை சேர்ந்த SH-60K என்கிற இரண்டு ஹெலிகொப்டர்கள் தலா நான்கு பேருடன் பயணித்துள்ளது.
சனிக்கிழமை இரவு டோக்கியோ நகரின் தெற்கு திசையில் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டோரிஷிமா தீவு (Tori-shima) அருகே கடைசியாக இந்த ஹெலிகொப்டர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு ஹெலிகொப்டர்களின் தொடர்பை பெற இயலவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் (Defense Minister) மினோரு கிஹாரா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்திற்கான காரணம் அறியப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நேருக்கு நேர் மோதி
மேலும் பசிபிக் பெருங்கடலில் ஹெலிகொப்டர்கள் விழுவதற்க்கு முன்பு இரு ஹெலிகொப்டர்களும் நேருக்கு நேர் மோதி இருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சர் கிஹாரா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
விபத்து நடந்ததை அறிந்த மீட்பு குழுவினர் உடனேயே சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் காணாமல் போயுள்ள 07 பேரை தேடும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |