மலையக அநீதிகளை கையாள விரைவில் புதிய ஜனாதிபதி செயலணி
மலையக மக்களுக்கு ஏற்படும் அநீதிகளைக் கையாள்வதற்காக ஜனாதிபதி செயலணியொன்று விரைவில் அமைக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த ஜனாதிபதி செயலணியானது மலையக சமூகத்தின் ஒரு அங்கமான பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் நிபுணத்துவம் வாய்ந்த இளைஞர்களால் வழிநடத்தப்படும்.
நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை பத்திரம்
மலையக தமிழ் தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்து 200 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தில் சமூகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |