புதிய அரசியல் கூட்டணி:பேச்சுக்கள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் மகிந்த அமரவீர
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (United People's Freedom Alliance) (UPFA) பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மக்கள் ஐக்கிய முன்னணி (People's United Front), பிவித்துரு ஹெல உறுமய (Pivithuru Hela Urumaya), தேசிய சுதந்திர முன்னணி (National Freedom Front), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers Congress.) உள்ளிட்ட கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அவ் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேலும் சில கட்சிகள் மற்றும் தேசிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆண்டில், நாட்டுக்கு சார்பான புதிய அரசியல் சக்தியை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri