கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி
இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் தொடங்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தீவிர இடதுசாரி முன்னணி மற்றும் ஒன்பது கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக விசேட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணியின் பெயர்
இந்த புதிய அரசியல் கூட்டணிக்கு பல பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத போதிலும், அலுவலகப் பொறுப்பாளர்களை நியமிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan