அரச காணிகளைப் பயன்படுத்த புதிய கொள்கை : ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக ரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை ரத்துச்செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும் திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டிய சுற்றறிக்கைகளை தற்காலத்திற்கு உகந்தவகையில் திருத்துவதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட 'சுற்றறிக்கைகள் திருத்தக் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இட்மபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(17.06.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தற்போதைய சட்ட விதிகள்
விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவின் தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதி அலுவலகத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ விவகாரங்கள் பிரிவின் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்ட ஆலோசகர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மேல் மாகாண காணி ஆணையாளர் ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாகச் செயற்படுவர்.
இக்குழுவின் அழைப்பாளராக காணி ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சட்ட விதிகளுக்குள், அரச வருமானம் சாதகமான முறையில் அதிகரிக்கும் வகையில், குத்தகைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு வரி வசூலிப்பில் நம்பகமான, சீரான மற்றும் நிலையான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகைகளை வழங்கும்போதும், இலவச காணி கொடுப்பனவுப் பத்திரங்களை வழங்கும்போதும் வசூலிக்கப்படும் வருடாந்த வரிப் பணத்தை மீளாய்வு செய்தல் என்பன இந்தக் குழுவின் பணியாகும்.
புதிய கொள்கை
இதற்கமைய, சுற்றறிக்கைத் திருத்தம் தொடர்பாக நிபுணர் குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறைந்த பயன்பாட்டிலுள்ள அரச காணிகளை தற்காலத்திற்கு உகந்த வகையில் பயன்படுத்துவதற்காக புதிய கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த சந்திப்பில், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரவீந்திர பத்திரணகே, காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும், நிதி அமைச்சு மற்றும் விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 11 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam