வடக்கில் மணல் தட்டுப்பாட்டை குறைக்க புதிய திட்டம் - தேவையுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Nagalingam Vedanayagam
By Thevanthan Sep 23, 2026 05:18 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, குளங்களில் இருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை பொதுமக்களின் கட்டுமானத் தேவைகளுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இன்று(23.09.2026) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன்,3 கியூப் மணல் சுமை ரூ.44,000 என்ற விலையில் வழங்கப்படுவதுடன், மணலைக் கொண்டு செல்வதற்கான வாகனக் கட்டணம் பயணத் தூரத்துக்கு அமைவாக நிர்ணயிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு அறிவித்துள்ளார்.

குளங்களில் தேங்கியுள்ள மண்ணைக் கழுவி சுத்திகரித்து, கட்டுமானத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் அதனை மக்களுக்கு விநியோகிப்பதற்கான பொறிமுறை, கடந்த 17.09.2026 அன்று வட மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மணல் தேவையுள்ளவர்களுக்கான அறிவுறுத்தல்கள்

மணல் தேவையுள்ளவர்கள் தமது தேவையின் தன்மைக்கு ஏற்ப, பின்வரும் மூன்று வகைகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

1. பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளர்களுக்குத் தேவையான மணல் அளவு தொடர்பான விவரங்கள், உரிய நடைமுறையின் கீழ் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வடக்கில் மணல் தட்டுப்பாட்டை குறைக்க புதிய திட்டம் - தேவையுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு | New Plan To Alleviate Sand Shortage In The North

2. அரச நிதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கட்டடப் பணிகளுக்குத் தேவையான மணல் தொடர்பான கோரிக்கைகள், உரிய திணைக்களத்தின் பரிந்துரையுடன், தேவையான மணலின் அளவு குறிப்பிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

3. தனியார் கட்டுமானத் தேவைகளுக்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

4. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், வழங்கப்பட வேண்டிய மணலின் அளவை மாவட்டச் செயலர் பரிந்துரைத்து, குறித்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலரின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றம் உரிய மணல் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும். மணல் விநியோகம் கிளிநொச்சி மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் வகையில் பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மணல் சுமை உரிய பயனாளியின் குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படும்.

வாகனம் செல்லும் தூரத்திற்கேற்ப விலை நிர்ணயம்

3 கியூப் மணலின் அடிப்படை விலை ரூ.44,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக மணலைக் கொண்டு செல்லும் தூரத்துக்கு ஏற்ப வாகனக் கட்டணம் அறவிடப்படும்.

வடக்கில் மணல் தட்டுப்பாட்டை குறைக்க புதிய திட்டம் - தேவையுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு | New Plan To Alleviate Sand Shortage In The North

கிளிநொச்சி மாவட்டத்துக்கான வாகனக் கட்டணப் பொறிமுறையில், முதல் 3 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு ரூ.10,000 அறவிடப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து 10 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.300 வீதமும், 10 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.225 வீதமும் அறவிடப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான போக்குவரத்துக் கட்டணப் பொறிமுறையில், ஆரம்ப 3 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கான கட்டணம் கிலோமீற்றருக்கு ரூ.1,250 எனவும், தொடர்ந்து 10 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.300 எனவும், 10 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.225 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மணல் தட்டுப்பாட்டை குறைக்க புதிய திட்டம் - தேவையுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு | New Plan To Alleviate Sand Shortage In The North

மணல் விநியோகத்தில் ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில், விண்ணப்பம் முதல் மணல் அளவு நிர்ணயம், உள்ளூராட்சி மன்றத்தில் பணம் செலுத்துதல் மற்றும் பாரவூர்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக மணல் விநியோகம் செய்தல் வரையிலான அனைத்து கட்டங்களும் முறையான நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மணல் தட்டுப்பாட்டை குறைக்க புதிய திட்டம் - தேவையுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு | New Plan To Alleviate Sand Shortage In The North

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் - உயர்மட்ட பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் - உயர்மட்ட பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

வெளிநாட்டு முதலீட்டுப் பணத்தில் 6 ஹோட்டல்களில் முதலீடு செய்த முன்னாள் அமைச்சரின் மகன்! அம்பலமான உண்மைகள்

வெளிநாட்டு முதலீட்டுப் பணத்தில் 6 ஹோட்டல்களில் முதலீடு செய்த முன்னாள் அமைச்சரின் மகன்! அம்பலமான உண்மைகள்



மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US