பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள புதிய அறிவிப்பு
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கு இம்முறை விண்ணப்பிக்கும் போது,தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை
தேசிய அடையாள அட்டை இல்லாத, ஆனால் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் எதிர்வரும் காலங்களில் குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
