இலங்கையில் புதிதாக 4 புதிய மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்படவுள்ளன
தமக்கு எதிரான சிறைத்தண்டனையை ஆட்சேபித்து கைதிகள் மேற்கொள்ளும் மேல்முறையீடுகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்த நான்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் விரைவில் நிறுவப்பட உள்ளதாக சிறைத்துறை ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் சிறை மற்றும் மறுவாழ்வு அமைச்சர் லொகான் ரத்வத்த ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனைகளுக்கு எதிராக கைதிகள் மேற்கொள்ளும் மேன்முறையீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சந்திப்பின் போது பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தவிர, 1998 க்குப் பின்னர் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையைக் குறைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1998 க்குப் பின்னர் தண்டனை விதிக்கப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தவிர ஏனைய கைதிகளின் மரண தண்டனை சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாக மாற்றப்படும்.
இதன்படி, 1998 க்குப் பின்னர் தண்டனை விதிக்கப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தவிர ஏனைய கைதிகளின் மரண தண்டனை சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாக மாற்றப்படும்.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri