வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு! இலங்கையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக புதிய முறை அறிமுகம்
லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
எரிவாயு முன்பதிவு
அதன்படி வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி (LITRO Home Delivery) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்குகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு அறிக்கையில், மொபைல் செயலியின் மூலம் நுகர்வோர் ஒருவர் எந்த வகையான உள்நாட்டு அல்லது தொழில்துறை எரிவாயு கொள்கலனையும் உலகில் எங்கிருந்தும் பெற முடியும்.
டொலர் மூலம் பணம் செலுத்தும் வாய்ப்பு
நுகர்வோர் தங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் லிட்ரோ எரிவாயுவை கொள்வனவு செய்யலாம்.
கோரிக்கைகளை மேற்கொண்டு, பணம் செலுத்துவதன் மூலம் அவர்கள் இதனை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் உடனடியான விநியோகத்தையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட லிட்ரோ மொபைல் செயலியின் ஊடாக நுகர்வோர் உலகில் எங்கிருந்தும் தங்களின் கொடுப்பனவை டொலர் மூலம் செலுத்தலாம்.
மொபைல் செயலியை இப்போது iOS மற்றும் Android இல் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
